யாருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்லது?
‘கொஞ்சம் ரிஸ்க்’ எடுக்கலாம் என்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரலாம். ஆனால், அதிலும் நிபுணர் ஒருவரின் வழிகாட்டுதல் இருப்பது கட்டாயம்.
குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு அந்தப் பணத்தின் வருமானம் தேவையில்லை என்பவர்கள் மட்டும் மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல வருமானத்தை பெற முடியும்.
ஏழு ஆண்டிற்குள்ளேயே பணம் வேண்டும் என்பவர்கள் ஆர்.டி நல்ல ஆப்ஷன்.
இடைக்கால முதலீடு, நீண்ட கால முதலீடுகளை தேர்ந்தெடுப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டிற்கு அதிகம் தெரியாத ஃபண்டுகள், புதிதாக அறிமுகமாகி உள்ள ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. நன்கு தெரிந்த ஃபண்டுகளையே எப்போதும் தேர்ந்தெடுப்பது நல்லது.

பங்குச்சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறதே?
எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இறக்கத்தில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டாம். அவர்கள் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே வரலாம்.
ஆனால், லம்சம் முதலீடு செய்பவர்கள் சந்தையின் போக்கை கட்டாயம் கவனிக்க வேண்டும். நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.