தங்கம் மோசமான முதலீடு? வாரன் பஃபெட் விளக்கம்|Gold Is Useless? Buffett’s Bold Investment View

Spread the love

தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு.

தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் பார்க்கின்றனர்.

ஆனால், தங்கம் ஒரு மோசமான முதலீடு என்கிறார் முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட்.

ஒன்று, தங்கம் எதையும் உற்பத்தி செய்யாது… வட்டியையோ, டிவிடென்டையோ தராது. ஒரு அவுன்ஸ் தங்கத்தை 100 ஆண்டுகள் வைத்திருத்தாலும், அது ஒரு அவுன்ஸ் தங்கமாகத் தான் இருக்கும்.

இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் போது, மக்களுக்கு பயம் வரும்போது தான் தங்கம் விலை ஏறும்.

வாரன் பஃபெட்டைப் பொறுத்தவரை, பணம் பெருக்குவதில் மனிதனின் உணர்வுகள் கலந்திருக்கக் கூடாது.

மூன்றாவது, தங்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுத்து அதை மீண்டும் பத்திரமாக மக்கள் தங்களது வீடுகளில் புதைத்து வைக்கிறார்கள்.

தங்கம் தொழிற்சாலைகளில் கூட பெரிதாக பயன்படுவதில்லை என்று கூறுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *