இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 84,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ. 84,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 குறைந்து ரூ. 10,510 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ. 150 -க்கு விற்பனை செய்யப்பட்டது. மூன்றாவது நாளாக தொடர்ந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது.