சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 9) அதிரடியாக சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது.
பல்வேறு சர்வதேச காரணங்களால் சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதில், கடந்த செப். 1-இல் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640- க்கும், செப். 2-இல் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 77,800-க்கும், செப். 3-இல் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து செப். 4-இல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கு விற்பனையான நிலையில், செப். 5-இல் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.78,920-க்கும், செப். 6-இல் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையானது.
கடந்த ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,080 உயர்ந்தது.
இதைத் தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கும்போது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், பிற்பகலுக்கு மேல் வர்த்தகம் நிறைவுபெறும் தருவாயில், தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ. 90 உயா்ந்து ரூ.10,060-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 9) கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 10,150-க்கும் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு