தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

Dinamani2fimport2f20232f72f192foriginal2fgold072453.jpg
Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 10) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 50,800-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 75 உயா்ந்து ரூ. 6,425-க்கும், சவரனுக்கு ரூ. 600 உயா்ந்து ரூ. 51,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும்(ஆக. 10) சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,560-க்கும், கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 6,445-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ. 88.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயா்ந்து ரூ.88,100-க்கும் விற்பனையாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *