அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,365க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.50,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனையாகிறது.
கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் அன்று தங்கத்தின் விலை ரூ.62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது.