தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

dinamani2F2025 06 252F3lc7w26j2FPTI04302025000143B
Spread the love

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 -க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ரூ. 86,160, செவ்வாய்க்கிழமை ரூ. 86,880, புதன்கிழமை ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (புதன்கிழமை) காலை ரூ. 240, மாலை ரூ. 480 என இரண்டு முறை அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 87,040 -க்கும், ஒரு கிராமின் விலை ரூ. 10,880 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ஒரு கிராமின் விலை ரூ. 163 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Gold and silver prices today

இதையும் படிக்க : எனக்கு 63; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *