இப்போது தங்கம் விலையில் சரிவா என்று பார்த்தால், அது “இல்லவே இல்லை’. தங்கம் விலை தற்போது கரெக்ஷனில் இருந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,100 டாலருக்குக் கீழ் இறங்கினால் தான், அது பெரும் சரிவைச் சந்திக்கும். ஆக, தங்கம் விலை இந்த லெவலைத் தொடும் வரை பயம் தேவையில்லை.
இப்போது முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
> தங்கத்தில் இப்போதைக்கு பெரியளவிலான முதலீட்டை தவிர்த்துவிடுவது நல்லது. முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் சிறிய அளவில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
> தங்கத்தில் முதலீடு என்று வந்துவிட்டால், அது நீண்ட காலத்திற்கானதாக இருப்பது தான் நல்லது. அதனால், தங்கத்தில் முதலீடு செய்ய SIP முறையைத் தேர்ந்தெடுங்கள்.
> ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், பயத்தில் அவற்றை விற்றுவிடாதீர்கள். இது தவறு.
தங்கம் விலை இப்போது இறங்கி வருவது ‘குறுகிய கால நிலையற்ற தன்மை தான்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.