தங்க விலை தற்போது சற்று நிதானித்திருக்கிறது. அதனால், இப்போது தங்கத்தில் முதலீடு செய்து வைக்கலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களுக்கான பதிலைத் தருகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
“டெக்னிக்கல் ஆய்வின்படி, தற்போது தங்கமும், வெள்ளியும் ஏறுமுகத்தில்தான் இருக்கின்றன. தற்போது நிதானித்திருப்பதற்குக் காரணம், “கன்சாலிடேஷன்’.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,400 – 4,500 டாலருக்குக் கீழும், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸிற்கு 70 – 72 டாலருக்குக் கீழும் சென்றால்… தங்கம், வெள்ளி விலையில் வீழ்ச்சி, இறங்குமுகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இதுவரை சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு கிட்டத்தட்ட 5,300 டாலர்கள் வரை சென்றுள்ளது என்றும், வெள்ளி கிட்டத்தட்ட 120 டாலர்களைத் தாண்டிச் சென்றுள்ளது என்றும் நமக்கு தெரியும்.
மேலே, வீழ்ச்சிக்கான லிமிட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த இரண்டு லிமிட்டுகளுக்குள் தங்கம், வெள்ளி இருக்கும் வரை, இது சிறந்த டிரேடிங்கிறான நேரம்.
முதலீட்டாளர்கள் இப்போது கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்து, பின்வரும் லாபத்தைப் பெறலாம்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் மேலே கூறிய லிமிட்டிற்குச் செல்லும் வரை, அவர்களது முதலீட்டைக் கொஞ்சமாக தொடரலாம்”.