கடந்த சில நாள்களாக அதிரடி விலை ஏற்றங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், மீண்டும் வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 63,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,980 ஆக உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.