ஜூலை 25 -இல் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும், ஜூலை 26 -இல் ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும், ஜூலை 29 இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200-க்கு விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயா்ந்து, ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.127-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.