சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 58,080-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7,285-க்கு விற்பனையாகிறது.