சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச.7) சவரன் ரூ 56,920-க்கு விற்பனையான நிலையில், வாரத் தொடக்கமான திங்கள்கிழமை (டிச.9) கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,130-க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,040-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 10) கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ரூ. 7,205-க்கும், சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 57,040-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!
வெள்ளி விலையும் உயர்வு!
நேற்று வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,00,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 4 அதிகரித்து ரூ. 104-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.