மேலும், பிசிக்கல் தங்கத்தின் தேவையைக் குறைக்க தங்கம் பணமாக்குதல் திட்டம், தங்க இ.டி.எஃப்கள், தங்கப் பத்திரங்கள் போன்றவற்றை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியையும், அதன் மீது உள்ள அழுத்தத்தையும் குறைக்கலாம். இதன் மூலம், இந்தியாவில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியையே பயன்படுத்தலாம்.
சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் தங்க இறக்குமதி, தங்க வர்த்தகத்தை தடுக்க… கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ”
