தங்கம், வெள்ளி விலை உயர்வு; முதலீடு செய்யலாமா?|Gold Shines, Silver Soars: Invest Now or Stay Cautious?

Spread the love

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் (28.34 கிராம்) 4,330 டாலர்களைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது.

ஒரு அவுன்ஸ் வெள்ளி 66 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இது வரலாற்று உச்சம் ஆகும்.

கடந்த ஆண்டு இந்தத் தேதியிலிருந்து இன்று வரை வெள்ளி விலை 130 சதவிகித உயர்ந்திருக்கிறது. தங்கம் 65 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளியில் தற்போது முதலீடு செய்யலாமா?

தற்போதைய விலை உயர்வை அறுவடை செய்ய தங்கம், வெள்ளியில் “டிரேட்’ தான் செய்ய வேண்டும். டிரேடிங் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதனால், மிகுந்த கவனம் தேவை.

‘இப்போது எனக்கு பணம் தேவையில்லை… சில ஆண்டுகள் கழித்து தான் தேவை’ என்கிற பட்சத்தில், தங்கம், வெள்ளி இ.டி.எஃப்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்குங்கள்.

தங்கம், வெள்ளியில் லம்சம் முதலீட்டை அறவே தவிர்த்துவிடுங்கள். காரணம், இந்த ஆண்டு தங்கம், வெள்ளியில் முறையே கிடைத்த 130 சதவிகித மற்றும் 65 சதவிகித வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காது.

அதனால், லம்சம் முதலீட்டிற்கு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *