சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஈரோன் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர்பதற்றம் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ3,00,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,550 விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதே போன்று, வெள்ளியும் மாலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினம் தங்கம் தங்கம் கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், பவுனுக்கு ரூ.1,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,26,200-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.325-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,25,000-க்கும் சந்தையில் விற்பனை ஆனது.
வார தொடக்க நாளான இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ. 115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660 விற்பனை ஆகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,15,000 விற்பனை செய்யப்படுகிறது.
