தங்கம், வெள்ளிக்கு சொன்ன அதே காரணம் தான் இதற்கும். அரசியல், பொருளாதார நிலையற்ற காரணங்களால் சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
அடுத்ததாக, தற்போது வெளியாகி வரும் மூன்றாம் காலாண்டு முடிவுகள் அவ்வளவு ஊக்கமானதாக சந்தைக்கு அமையவில்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து விற்றுத் தான் வருகிறார்கள்.
இந்திய பட்ஜெட் வேறு இன்னும் சில நாள்களில் வர உள்ளது. அதற்காகவும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகிறார்கள்.
அதனால், கொஞ்சம் கவனமாக சந்தையில் முதலீடு செய்வது நல்லது.
வெளியாகும் முடிவுகளைப் பொறுத்து, உங்களுடைய பங்குகளின் வளர்ச்சி… எதிர்காலத்தைக் கணித்து, அடுத்தடுத்த நகர்வுகளைப் பிளான் செய்யுங்கள்.