22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளிரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.
இந்தநிலையில், மாலையில் தங்கம் சவரன் 720 ரூபாய் உயர்ந்து, சவரன் 1 லட்சத்து 560 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. காலை கிராம் 80 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரம் விலை உயர்ந்து உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் நாள்தோறும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
