தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் ஆக. 15-ல் உலகளவில் வெளியாகி்யது.
கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.
இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள்.
கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 26. 44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி விடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ள நிலையில் உமா ரவி வரிகளை எழுதியுள்ளார்.