தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!

Dinamani2f2024 072fa79d8c71 Ebdf 4be5 Bba1 38ffcf661ee92fscreenshot202024 07 2320151748.jpg
Spread the love

தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தங்கலான் படக்குழு புரோமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக, படத்தை விளம்பரப்படுத்த தென்னிந்திய மாநிலங்கள், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இப்படம், ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *