வீட்டில் நகையாக வாங்கி வைத்திருக்கிறோம். ‘நான் வாங்கும்போது இவ்வளவு இருந்துச்சு… இப்போ இவ்வளவு ஆயிருக்கு’ என்று சந்தோஷம் தான் பட்டுக்கொள்ள முடியுமே தவிர, இந்த லாபத்தை நாம் கண்ணிலோ, கையிலோ பார்க்கப்போவதில்லை. அது வெறும் நினைப்புடனேயே போய்விடுகிறது. இதற்கு ‘Paper Profit’ என்று பெயர்.
ஒருவர் லாபம் பெற வேண்டுமானால், அதை விற்க வேண்டும்… கையிலோ, கணக்கிலோ பணமாக கிடைக்க வேண்டும். ஆனால், இந்திய வீடுகளில் எக்காரணத்தைக் கொண்டும் நகையைப் பெரும்பாலும் விற்கமாட்டோம். அப்போது அது முதலீடு அல்ல… அது வெறும் ‘வாங்குதல்’ மட்டும் ஆகும்.
ஒருவேளை, அவசரக் காலத்தில் கூட, நகையை அடகு தான் வைப்போமே தவிர, அதை விற்கமாட்டோம். இதுவும் தங்கத்தை முதலீடு என்று சொல்வதற்கான நல்ல காரணம் இல்லை.
சமீபத்தில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி, தங்க நகைக் கடனின் வளர்ச்சி 138 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நம் கையில் நல்ல முதலீடு இருக்கும்போது, அதை விற்காமல் மேலும் மேலும் கடன்காரர்களாக தான் ஆகிக் கொண்டிருக்கிறோம்.
தங்கத்தை வாங்குகிறோம்… விற்கிறோம்.. மீண்டும் வாங்குகிறோம்… விலை உயரும் போது விற்கிறோம் என்றால் தான், தங்கம் உண்மையிலேயே நல்ல முதலீடு.