வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைவரும் அவசியம் தெரிந்துவைத்திருப்பது நல்லது. இல்லாவிட்டால், கடைசி நேரத்தில் நாம் பதற்றத்திற்கு உள்ளாக வேண்டி இருக்கும்.
வருகிற 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் எப்படி மாறப் போகின்றன?

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது.!
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், பான் கார்டு தரவேண்டும் என்பது தற்போதுள்ள நடைமுறை ஆகும். ஆனால், வருகிற 1-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையின்படி, வங்கியில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போதுதான் பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். அதற்குக் கீழே இருக்கும் தொகை அளவுக்கு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் பான் கார்டு எண் தரத் தேவை இல்லை என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது…
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், பான் கார்டு எண் தரவேண்டும்.