தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் பணியிடை நீக்கம் | Thanjavur Tamil University Vice-Chancellor suddenly suspended

1340449.jpg
Spread the love

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு​வள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தர​விட்​டுள்​ளார்.

சிதம்​பரம் அண்ணாமலை பல்கலைக்​கழகத்​தில் மொழி​யியல் உயர்​படிப்பு மையத்​தின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வி.திருவள்​ளுவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்​கழகத்​தின் துணைவேந்​தராக 2021 டிசம்பர் 13-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்​தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு: இந்நிலை​யில், துணைவேந்தர் திரு​வள்​ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்ளதாக தகவல் வெளி​யாகி உள்ளது. அவரை, விசா​ரணையை முன்னிறுத்தி பணியிடை நீக்கம் செய்​வதாக தமிழக ஆளுநரின் செயலாளர் கிர்​லோஸ்​கு​மார் உத்தர​விட்டு, அதற்கான உத்தரவு நகலை அனுப்​பி​யுள்​ளார்.

திண்​டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்​தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் பங்கேற்கச் சென்​றிருந்த துணைவேந்தர் திரு​வள்​ளுவனிடம் அதற்கான நகல் வழங்​கப்​பட்​டது. இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்​பட்டு தஞ்சாவூர் வந்து, தனது குடி​யிருப்​பில் இருந்த பொருட்களை எடுத்​துக் கொண்டு, சொந்த ஊரான விழுப்புரம் மாவட்​டத்​துக்​குச் சென்​றார்.

அவர் எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்​பட்​டுள்ளார் என்ற முழு விவரம் தெரிய​வில்லை. கடந்தமாதம் 19-ம் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் நடைபெற்ற14-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். துணைவேந்தர் பதவிக்​காலம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்​பட்​டுள்ளது கல்வி​யாளர்கள் மத்தியில் அதிர்​வலைகளை ஏற்படுத்​தி​யுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *