பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனை, புதன்கிழமை நள்ளிரவு அடித்து, நொறுக்கப்பட்டதற்கு, சம்பவ இடத்திலிருக்கும் தடயங்களை அழிப்பதே என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகம் ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்ததை சுட்டிக்காட்டியிருக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றம், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கையும் சிபிஐ வசம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.