தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா? | Cooking Gas Quantity in Cylinders to Decrease from 14.2 kg to 10 kg

Spread the love

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றன. அதோடு உணவு பொருட்களின் விலையையும் அதிகரித்துவிட்டன. அதோடு அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது அதிகப்படியான சிலிண்டர்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்காக ஆயில் கம்பெனிகள் சேர்ந்து ஒரு புதிய முடிவை எடுத்துள்ளன. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் 14.2 கிலோ அளவுக்கு எரிவாயு இருக்கிறது.

இதனை 10 கிலோவாக குறைக்க ஆயில் கம்பெனிகள் பரிசீலித்து வருகின்றன. இது தொடர்பான திட்டத்தை ஆயில் கம்பெனிகள் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளன. அதன் மீது முடிவு எடுக்கவேண்டியது அரசுதான் என்று ஆயில் கம்பெனிகள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “‘ இது போன்ற யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அந்த செய்தி வதந்தியாகும். நாடு முழுவதும் எந்தவித தடங்களும் இல்லாமல் சிலிண்டர் சப்ளை நடைபெறுகிறது. எரிவாயு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியா எல்.பி.ஜி.க்கு 60 சதவீதம் வெளிநாட்டையே நம்பி இருக்கிறது. ஆனால் தற்போது வளைகுடாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக அங்கிருந்து எல்.பி.ஜியை கப்பலில் கொண்டு வரமுடியாத நிலை இருக்கிறது. ஈரான் அரசு கப்பல்கள் செல்லக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால் வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய கப்பல்கள் ஹார்முஸ் வளைகுடாவிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இரண்டு கப்பல்கள் அந்த ஜலசந்தி வழியாக எல்.பி.ஜி எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *