அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது.

தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,”கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.