தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்

Dinamani2f2024 09 182f13sbc01z2fthiruma.jpg
Spread the love

சென்னை: தனியாரை மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ) நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தொடர்ந்து மீண்டும் மீண்டும் நம் போராடுவதற்கான காரணத்தை நம் அறிவோம். ஆனாலும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையுள்ளது. புதிதாக நாம் வைக்கக்கூடிய கோரிக்கை 2011 மக்கள் தொகை அடிப்படையில் மூன்று சதவிகிதம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளவையும் உயர்த்த வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கூடாது என்று உறுதியாக உள்ளார்கள்.

வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16(4A)-க்கான சட்டம் வரும் என்று பெரிதும் நம்புகிறேன், பதவி உயர்வுக்காக காத்திருக்க கூடியவர்களுக்கு சட்ட பாதுகாப்பை தருகிற ஒரு வாய்ப்பை அதிகாரத்தை 16(4A) தருகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டத்தின் முக்கியமான கோரிக்கை. மத்திய அரசுதான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது, அவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கின்ற சக்திகளும் இருப்பதை 2013 இல் நம்மால் பார்க்க முடிந்தது. அந்த சட்டம் நிறைவேறி இருந்தால் இந்த சட்டத்தை நிறைவேற்ற கோர வேண்டியதில்லை , மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக்கான ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை, பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் பதவி உயர்வுக்கான சட்டத்தை கொண்டு வர எந்த முனைப்பும் காட்டவில்லை, ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அவர்களுக்கு உடன்பாடு கிடையாது, இட ஒதுக்கீட்டு கொள்கையால்தான் தரம் தாழ்ந்து விட்டது என்று நம்புகிறார்கள். இதற்காகவே அரசுத்துறைகளையும் பொதுத்துறைகளையும் தனியார் மையப்படுத்த விரும்புகிறார்கள், தனியார் மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *