Last Updated : 22 Nov, 2024 10:13 PM
Published : 22 Nov 2024 10:13 PM
Last Updated : 22 Nov 2024 10:13 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மூவர் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசிபுரத்திற்கு பயணிகளுடன் நேற்று இரவு தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. நாமகிரிப்பேட்டையை அடுத்த மெட்டாலா கோரை ஆறு பகுதியில் பேருந்து வந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர், பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் என மூவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால், இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விபத்து நடந்த பகுதிக்கு வந்த நாமக்கல் ஆட்சியர் உமா, மீட்பு பணிகளை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
FOLLOW US