இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தற்போது முழுநேர தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 2026 வரை சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.
ஜெயசூர்யா தலைமையில் நியூசிலாந்து அணியுடன் தொடரை வென்று அசத்தியுள்ளது இலங்கை அணி.
பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை ஜெயசூர்யா வழிநடத்துவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 2 ஆண்டுகளில் 86 டி20 விக்கெட்டுகள்..! வாழ்க்கையின் மந்திரம் குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்!
ஜூனில் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.
சனத் ஜெயசூர்யா இலங்கையின் சமீபத்திய வெற்றி குறித்து பேசியதாவது:
கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையும் நம்பிக்கையும்தான். நான் அணியைச் சுற்றி இதனை உருவாக்கினேன். அதுதான் மிகவும் முக்கியமானது. அதனுடன் சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும். நீங்கள் அவ்வளவு கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் என்பதும் வேண்டும்.
அதே நேரம் வீரர்களுக்கு சரியாக விளையாட வேண்டுமென்ற திடமான எண்ணம் வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியும். மனதளவில் சோர்ந்துபோன வீரர்களுக்கு ஆதரவளிக்க வெண்டுமென இலங்கை மக்களிடம் கேட்டுக்கொண்டேன்.
இதையும் படிக்க: சிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்ற அணி..! டு பிளெஸ்ஸி கூறியதென்ன?
இலங்கை அணியில் நல்ல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அவர்களுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையும் மட்டுமே அளித்தேன். அவர்கள் எது வேண்டுமானாலும் என்னிடம் கலந்துரையாடலாம் என்றார்.