தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? – விரைவில் அறிவிப்பு வெளியாகிறது | Announcement to be made soon for who is the new DGP of Tamil Nadu

1377890
Spread the love

சென்னை: தமிழக காவல் துறையின் பு​திய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெற்​றார்.

இதையடுத்​து, புதிய டிஜிபியை தேர்வு செய்யாமல் நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமனுக்கு கூடு​தலாக சட்​டம் – ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது.

இந்​நிலை​யில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான ஆலோ​சனை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய (யுபிஎஸ்​சி) அதி​காரி​கள், தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சீமா அகர்​வால், சந்​தீப் ராய் ரத்​தோர் உள்பட 8 பேரின் பெயர்​கள் பரிசீலனை செய்யப்​பட்​டது.

நிறை​வாக, முதல் 3 இடங்​களில் உள்ள சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர்​கள் இறுதி செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இவர்​களில் ஒரு​வர் விரை​வில் டிஜிபி​யாக நியமிக்​கப்​படு​வார்​கள்​ என தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *