கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலா் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.
தற்போது கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலா் 1-ஆக பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.