பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து விட்டது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனால், மன உளைச்சலில் இருக்கும் 1.5 லட்சம் ஆசிரியர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்று சொல்லவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாயிருப்பதாக ஒரு தவறான தகவலை வெளியிட்டு, மக்களை அரசு ஏமாற்றுகிறது.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவரால், மூன்றாம் வகுப்புப் பாடத்தை படிக்க இயலவில்லை. நெல்லையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்டார்கள். அண்மையில் பள்ளிக்கு அரிவாளைக் கொண்டு செல்கின்றனர். அரிவாளைத் தூக்குவதற்காகவா பள்ளிகள் நடத்தப்படுகின்றன?” என்று விமர்சித்தார்.