சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக 13-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும்மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (ஆக.8,9) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல, 10-ம் தேதி ஒருசில இடங்களிலும், 11, 12-ம்தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவுமேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.