தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் – அமைச்சர் பெரியகருப்பன்  | All ration shops in Tamil Nadu will function on Sunday – Minister Periyakaruppan

1330633.jpg
Spread the love

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (அக்.27) செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவரும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) அன்று முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *