தமிழகத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 25,278 பேர் பாதிப்பு  – Kumudam

Spread the love

பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்:  மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஸ் – எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் தினசரி 500க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது தற்போது 100க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. அதேபோல, கடந்தாண்டு 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பாதியாகக் குறைந்து உள்ளது. 

தமிழகத்தில்  25,278 ஆக மட்டும் 2025-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவும் 2024ம் ஆண்டு  13 பேர் உயிரிழந்த நிலையில், 2025ம் ஆண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில், 6,284 பேரும், திருவள்ளூரில் 2,094 பேரும், கோவையில் 1,882 பேரும், கடலூரில் 1,525 பேரும் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிராமங்களைவிட நகர்ப் பகுதிகளில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பரவுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஜனவரி, பிப்ரவரி வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *