திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று(ஆக.11) மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் , தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) முதல் ஆக.16 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை எச்சரிக்கை: அதன்படி, இன்று(ஆக.11) புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.