தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

dinamani2F2025 08 142Fqyi3raqt2FTNIEimport2021312originalPregnantwoman.avif
Spread the love

தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 2014 முதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 34,497 பெண்கள், தங்களின் 18 வயதுக்கு முன்னதாகவே கருவுற்றதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருவுற்றதாகக் கூறுகின்றனர்.

இதன்மூலம், இன்றளவும் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுவது தெரிகிறது. சிறுவயதில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களின் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான இடங்களில் குழந்தைத் திருமணங்கள் செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் குறைவான பெண்ணை திருமணம் செய்பவருக்கும், அதனை ஏற்பாடு செய்பவருக்கும் 2 ஆண்டுகள்வரை சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆனால், இந்தச் சட்டம் பல இடங்களில் அமல்படுத்தப்படுவதில்லை. சில படித்த பட்டதாரிகளே, இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *