தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS urged to honorary lecturers in tn should be made permanent

1371146
Spread the love

சென்னை: தமிழகத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் மொத்​தம் 180 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் 35 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் புதி​தாக தொடங்​கப்​பட்​டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்​டும் 15 புதி​யக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டதோடு, 253 புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதி​தாக பணி​யமர்த்​தப்​பட​வில்லை என்​பது​தான் வேதனை அளிக்​கிறது. தமிழகத்​தில் உள்ள அரசுகலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் உள்ள அனு​ம​திக்​கப்​பட்ட உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலை​யில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​கள் மட்​டுமே நிரந்தரமாக பணி​யாற்றி வரு​கின்​றனர்.

கிட்​டத்​தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரை​யாளர்​களாக 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக ரூ.25 ஆயிரம் தொகுப்பு ஊதி​யத்​தில் ஆண்டுக்கு 11 மாதச் சம்​பளத்தை பெற்​றுக் கொண்டு பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கின்​றனர். இவர்​கள் அனை​வருமே முதுகலைப் பட்​டம், ஆய்​வியல் நிறைஞர் பட்​டம், முனை​வர் பட்​டம் போன்​றவற்றை பெற்​றுள்​ளதோடு, தேசிய தகு​தித் தேர்​வு, மாநில தகு​தித் தேர்வு ஆகிய​வற்​றி​லும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

இவர்​கள் நிரந்​தரம் செய்​யப்​பட​வில்​லை. பல்​கலைக்​கழக மானியக் குழு பரிந்​துரைத்த ஊதி​ய​மும் இவர்​களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரண​மாக, இவர்​கள் அனை​வரும் விரக்​தி​யின் விளிம்​பில் உள்​ளனர். இதற்​கிடை​யில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்​கள் காலிப் பணி​யிடங்​களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டு, உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வைத் தொடர்ந்து ரத்து செய்​யப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து மேலும் 500 கவுரவ விரிவுரை​யாளர்​களை நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

கல்​லூரி​களில் அவ்​வப்​போது முறை​யாக உதவிப் பேராசிரியர்​கள் நியமிக்​கப்​ப​டாததும், நீண்ட கால​மாக பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் பணி நிரந்​தரம் செய்​யப்​ப​டாததும் கடும் கண்​டனத்​துக்​குரியது. அரசு கலைக் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​ப​டாத​தால் மாணவ, மாண​வியர் சேர்க்கை சென்ற ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது 16,000 ஆக குறைந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்​கிறது.

எனவே, உயர் கல்​வியை மேம்​படுத்த அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் நிரந்​தர​மாக உதவிப் பேராசிரியர்​களை நியமிக்​க​வும், 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக பணிபுரி​யும் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்​ய​வும் நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *