தமிழகத்தில் செப். 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Chance of rain in tn till Sept 4

1374760
Spread the love

சென்னை: தமிழகத்​தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​திகளின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

நாளை முதல் முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும் அதி​கபட்ச வெப்​பநிலை, வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகு​திகளில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *