தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு | Moisture content determination for paddy procurement in Tamil Nadu

Spread the love

சென்னை: நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை நிர்​ண​யம் செய்​வதற்​காக தமிழகம் வந்​துள்ள 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்​கு​கின்​றன.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் சம்​பா, தாளடி நெல் சாகுபடிப் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. தமிழகத்​தில் இது​வரை 21 லட்​சம் ஹெக்​டேரில் நெல், சிறு​தானி​யங்​கள் உட்பட பயிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளன. இதில் 5 லட்​சம் ஹெக்​டேரில் சாகுபடி செய்​த நெற்​பயிரில் 3.60 லட்​சம் ஹெக்​டேர் பரப்பிலான நெல் அறு​வடை செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் 9.67 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே பரு​வ​மழை காரண​மாக தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​களில் நெற்​ப​யிர்​கள் அறு​வடைக்கு முன்​னரே தண்​ணீரில் மூழ்​கி​ன. அறு​வடைசெய்த நெல்​லும் அதி​களவு ஈரப்​ப​தத்​துடன் உள்​ளது. எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை தற்​போதுள்ள 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்​துக்கு 3 குழுக்​களை மத்​திய உணவுத் துறை அனுப்​பி​யுள்​ளது.

இதன்படி முதல் குழு​வில், பஞ்​சாப் மாநிலம் லூதி​யா​னா​வில் உள்ள இந்​திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் துணை இயக்​கு​நர் ஆர்.கே. ஷாகி, தொழில்​நுட்ப அலு​வலர்கள் ராகுல் சா்​மா, தனூஜ் சர்மா ஆகியோ​ரும், 2-வது குழு​வில் அந்த நிறுவனத்தின் துணை இயக்​கு​நர் பி.கே.சிங்,ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோ​ரும் 3-வது குழு​வில் உதவி இயக்​கு​நர் டி.எம்​.

பிரீத்​தி, பிரியா பட், அனுபமா ஆகியோ​ரும் இடம் பெற்​றுள்​ளனர். தற்​போது தமிழகம் வந்​துள்ள இந்த 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் தங்களது ஆய்​வைத் தொடங்​க​வுள்​ளன.

அதன்​படி முதல் குழு​வினர் அக்​.25-ல் செங்​கை, அக்​.26-ல் திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் ஆகிய மாவட்​டங்​களில் ஆய்வு மேற்​கொள்​கின்​றனர். 2-ம் குழு​வினர் அக்​.25-ல் தஞ்​சாவூர், மயி​லாடு​துறை, அக்​.26-ல் திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மற்​றும் அக்​.27-ல் கடலூர் ஆகிய பகு​தி​களி​லும், 3-ம் குழு​வினர் அக்​.25-ல் திருச்​சி,புதுக்​கோட்​டை, அக்​.26-ல் தேனி,மதுரை ஆகிய மாவட்​டங்​களி​லும் ஆய்வு செய்​ய​வுள்​ளனர். இந்​தக் குழுக்​கள் பாதிக்​கப்​பட்ட மாவட்​டங்​களில் நெல் மாதிரி​களை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்​வறிக்​கையை சமர்​பிக்க வேண்​டும். அதன் அடிப்​படை​யில் அடுத்​த கட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும் என்று மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ள​தாக துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *