”காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் முதலிய திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை.
பிகார், அசாம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பள்ளிப்படிப்பை இடையில் விடும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப் பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019 – ல் 99 பேர் என்பது 2024 – ல் 100 பேர் என உயர்ந்துள்ளது.