தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு முழு மதுவிலக்கு வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் | Thirumavalavan insists for complete Prohibition of alcohol in tn to prevent crimes against women

Spread the love

சென்னை: பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைக் கட்​டுப்​படுத்த முழு மது​விலக்கை நடை​முறைப்​படுத்த அரசு முன்​வர​வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: கோவை​யில் கல்​லூரி மாணவி கூட்​டுப் பாலியல் வல்​லுறவு செய்த கொடூர குற்​ற​வாளி​களை காலில் சுட்​டுப்​பிடித்து தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அந்த மாணவி தற்​போது சிகிச்சை பெற்று வரு​கிறார். குற்​ற​வாளி​களை விரைந்து போலீ​ஸார் கண்​டு​பிடித்து கைது செய்​துள்​ளனர் என்​றாலும், தமிழகத்​தில் தொடர்ந்து பாலியல் வல்​லுறவு சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வது கவலை அளிக்​கிறது.

இந்​த குற்​றச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் மூவரும் குடி​போதை​யில் இருந்​துள்​ளனர். இங்கு மட்​டுமல்ல பெரும்​பாலான குற்​றச்​ சம்​பவங்​கள் குடி​போதை​யில் இருப்​பவர்​களாலேயே நிகழ்​கின்​றன.

பிஹார் மாநிலத்​தில் பூரண மது​விலக்கு நடை​முறைப்​படுத்​தப்பட்​டதற்​கு பிறகு பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை சம்​பவங்​கள் குறைந்து இருப்​ப​தாக அங்கு மேற்​கொள்​ளப்​பட்ட ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன. எனவே, தமிழகத்​தி​லும் பூரண மது​விலக்கை நடை​முறைப்​படுத்த தமிழக அரசு முன்​வர​வேண்​டும். இவ்​வாறு திரு​மாவளவன் கூறி​யுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *