தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu till 16th

Spread the love

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 11) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12, 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 3 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *