தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கம் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக புவிசார் குறியீடு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு வழக்குரைஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை – இதே போல் அரபிக்கடலும் வங்ககடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.