தருமபுரி: பாஜக சார்பில் தருமபுரியில் நடந்த கிராமக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் ராஜேந்திர சோழன் அமைச்சரானார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “அது மன்னராட்சி, தற்போது நடப்பது மக்களாட்சி. அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா. அவருக்குப் பிறகு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த பழனிசாமி என்ற மக்களாட்சி நிலைதான் உள்ளது. ஆனால், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என ஒரே குடும்பத்தினரே முதல்வர் ஆகிக் கொண்டிருந்தால் மக்களின் நிலை என்னாவது? மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மன்னராட்சி தேவையில்லை, மக்களாட்சி போதும்” என்றார்.