அத்துடன் புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள 72 சுங்கச் சாவடிகள் மூலம், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.26,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆறு நான்கு-வழிச் சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்னும் ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், விக்ரவாண்டி – தஞ்சை, மாமல்லபுரம் – புதுச்சேரி கிழக்கு, நாகை – தஞ்சை, திண்டுக்கல் – பொள்ளாச்சி, விழுப்புரம் – நாகை, குடிபலா – ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஆறு நான்கு-வழிச் சாலைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.