“தமிழகம் அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” – தவெக விஜய்| “Tamil Nadu is heading towards a dangerous future,” – TVK Vijay

Spread the love

சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சி

வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சி

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *