தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை | Central govt action for number of notaries increases in 4 states including tn

1380348
Spread the love

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது.

இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது.

இதன்​மூலம் தமிழகம், குஜ​ராத், ராஜஸ்​தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளால் நியமிக்​கப்​படக்​கூடிய அதி​கபட்ச நோட்டரிகளின் (சான்று உறுதி அலு​வலர்​கள்) எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, நோட்​டரி​கள் எண்​ணிக்கை தமிழகத்​தில் 2,500-ல் இருந்து 3,500 ஆகவும், குஜ​ராத்​தில் 2,900-ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்​தானில் 2,000-ல் இருந்து 3,000 ஆகவும், நாகாலாந்​தில் 200-ல் இருந்து 400 ஆகவும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மக்​கள்​தொகை வளர்ச்​சி, மாவட்​டங்​கள், வரு​வாய் வட்​டங்​களின் எண்​ணிக்​கை, நோட்​டரி சேவை​களுக்​கான தேவை ஆகிய​வற்றை அங்​கீகரித்​து, அந்​தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்​பட்ட கோரிக்​கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது. ‘நோட்​டரி பப்​ளிக்’ எனப்​படும் நோட்​டரி வழக்​கறிஞர்​கள் சொத்து ஆவணங்​கள், பத்​திரங்​கள், சாட்​சி​யங்​கள் போன்​றவற்​றுக்கு சான்​றளித்து அவற்​றுக்கு சட்​டப்​பூர்வ அங்​கீ​காரம் வழங்​கு​கின்​றனர்.

ஓர் ஆவணத்​தின் நகல் உண்​மை​யான நகல் என்​ப​தற்​கும், ஒரு​வரது அடை​யாளத்தை உறுதி செய்​வதற்​கும் அவர்​கள் சான்று அளிக்​கின்​றனர். பிர​மாணப் பத்​திரங்​கள் உள்​ளிட்ட இதர சட்ட ஆவணங்​களின் உண்​மைத் தன்​மையை சரி​பார்த்​து அவற்​றை பதிவு செய்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *