தமிழகம் முழுவதும் 42 இடங்களில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: திமுக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு | DMK protest against SIR

Spread the love

சென்னை: தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களைக் கண்​டித்து மாநிலம் முழு​வதும் 43 இடங்​களில் நடைபெற்ற ஆர்ப்​பாட்​டங்​களில் திமுக மற்றும் கூட்​டணிக் கட்சிகளின் தலை​வர்​கள், நிர்வாகி​கள் கலந்து கொண்​டனர்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளதைக் கண்​டித்து திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி சார்​பில் மாநிலம் முழு​வதும் 43 இடங்​களில் ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. சென்​னை​யில் 4 இடங்​களில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டங்​களில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்​து​ கொண்டு எஸ்​ஐஆர்​-க்கு எதி​ராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்​களை எழுப்​பினர்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்​பில் சைதாப்​பேட்​டை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, திக துணைத் தவைவர் கலி.பூங்​குன்​றன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு உரை​யாற்​றினர். இதில் செல்​வப்​பெருந்​தகை பேசும்​போது, ‘‘வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களை வேண்​டாம் என கூற​வில்​லை. தேர்​தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலை​யில், இப்பணி​களை மேற்​கொள்​ளும்​போது பொது​மக்​களிடம் குழப்​பம் ஏற்​படும். அதனால் இதை தேர்​தல் முடிந்த பிறகு செய்ய வேண்​டும்’’ என்​றார்.

சென்னை தென்​மேற்கு மற்​றும் மேற்கு மாவட்​டம் சார்​பில் சேப்​பாக்​கத்​தில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, இந்​திய கம்​யூனிஸ்ட் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் ஆகியோர் பங்​கேற்​றனர். சென்னை கிழக்கு மற்​றும் வடக்கு மாவட்ட திமுக சார்​பில் தங்​­க­​சாலை​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, விசிக தலை​வர் திரு​மாவளவன், மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​மு­கம் உட்பட ஏராள​மானோர் கலந்​து​கொண்​டனர். இதில் திரு​மாவளவன் பேசும்​போது, ‘‘எஸ்​ஐஆர் மூல​மாக சிறு​பான்மை சமூகத்தினரின் வாக்குரிமை இல்​லாதவர்​களாக மாற்றப்​படும் அபாய​முள்​ளது. பாஜகவெறும் அரசி​யல் கட்சி அல்ல.இந்​தி​யாவை விரும்பும்​படிமாற்​றியமைக்க உரு​வாக்​கப்பட்ட ஒரு பாசிச இயக்​கம். அதைவீழ்த்​தக் ​கூடிய ஒரே நம்​பிக்கை முதல்​வர் ஸ்டா​லின்​தான்’’ என்​றார்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ பேசும்​போது, ‘‘அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடித்​தளத்தை தகர்க்க பாஜக வேலை பார்க்​கிறது. 75 லட்​சம் வாக்காளர்​களை நீக்க வேண்​டும் என்று கங்​கணம் கட்​டும் பாஜக அரசுக்கு எடு​பிடி​யாக தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​கிறது’’ என்​றார். மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் பேசும்​போது, ‘‘குடி​யுரிமை​யைப் பறிக்​கும் ஆபத்து எஸ்​ஐஆரில் உள்​ளது. ஆளுங்​கட்​சி​யின் கைத்​தடி​யாக தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வதை அனு​ம​திக்க முடி​யாது. எஸ்​ஐஆரை தமிழகம் ஏற்காது. எனவே, அதை தேர்​தல் ஆணை​யம் திரும்​பப்​பெற வேண்​டும்’’ என்​றார்.

இதேபோல், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்​பில் மாதவரத்​தில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு எம்​எல்ஏ எஸ்​.சுதர்​சனம் தலைமை தாங்​கினார். எம்​எல்ஏ கே.பி.சங்​கர், சமத்​துவமக்​கள்​ கழகம்​ தலை​வர்​ எர்​ணாவூர்​ நா​ராயணன்​ உட்​பட ஏராள​மானோர்​ இதில் பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *