தமிழகம் முழுவதும் 56 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: சிவில் சப்ளை சிஐடி பிரிவு அதிகாரிகள் கூண்டோடு டிரான்ஸ்பர் | Transfer of 56 SPs across Tamil Nadu

1292640.jpg
Spread the love

சென்னை: தமிழகம் முழுவதும் 56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட் டுள்ளார். மேலும், சிவில் சப்ளை சிஐடி பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

சென்னை நுண்ணறிவு பிரிவு: சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை நுண்ணறிவு பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பிசுஜித் குமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக் கேணி காவல் மாவட்ட துணைஆணையராகவும் மாற்றப்பட்டுள் ளனர்.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (2) என்.எஸ்.நிஷா, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பிஹரிகிரன் பிரசாத், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும், திருப்பத்தூர் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி எஸ்.பி.யாகவும், திருவண்ணாமலை எஸ்.பி.கார்த்திகேயன் கோவை எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள் ளனர்.

திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் எஸ்.பி.யாகவும், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி புக்யா சினேக பிரியா, சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், சென்னை பூக்கடை காவல் மாவட்டதுணை ஆணையர் ஸ்ரேயா குப்தா,திருப்பத்தூர் எஸ்.பி.யாகவும், தாம்பரம் காவல் மாவட்ட பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம்கோயல் சேலம் எஸ்.பி.யாகவும், அங்கிருந்த அருண் கபிலன் நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

அதுமட்டும் அல்லாமல் விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் எஸ்.பி.யாகவும், நீலகிரி எஸ்.பி. சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காவல் நவீனமயமாக்கல் உதவி ஐ.ஜி டி.கண்ணன், விருதுநகர் எஸ்.பி.யாகவும், தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு துணை ஆணையராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையர் ஜி.ஸ்டாலின்மயிலாடுதுறை எஸ்.பி.யாகவும், கரூர் எஸ்.பி. கே.பிரபாகர் திருவண்ணாமலை எஸ்.பி.யாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தருமபுரி எஸ்.பி.யாகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் வி.ஆர்.னிவாசன் தென்காசி எஸ்.பி.யாகவும், சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவானன் வேலூர் எஸ்.பி.யாகவும், ஆவின் விஜிலென்ஸ் எஸ்.பி. மேகலினா, ஐடென் சென்னை தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப் பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் துணைஆணையர் வி.வி.கீதாஞ்சலி, அதே பிரிவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு (2) துணை ஆணையராகவும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டி.ரமேஷ்பாபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு மட்டும் அல்லாமல், கோவை எஸ்.பி.யாக இருந்த வி.பத்ரி நாராயணன் கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

சிவில் சப்ளை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு (சிவில்சப்ளை சிஐடி) பிரிவு மண்டலங்களான கோவை எஸ்.பி எம்.சந்திரசேகரன், திருச்சி ஏ.சுஜாதா, மதுரை விஜய கார்த்திக் ராஜ் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுளளது.

ஒட்டுமொத்தமாக நேற்று மட்டும் தமிழகத்தில் 56 போலீஸ் எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *